கார்கீவ் நகர் பள்ளிக்கூடம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் - 3 உடல்கள் மீட்பு

#Russia #Missile #Death
Prasu
2 years ago
 கார்கீவ் நகர் பள்ளிக்கூடம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் - 3 உடல்கள் மீட்பு

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் நகரங்கள் மீது இரவு, பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன 

ரஷிய படைகள். ரஷியா ராணுவம் 3000-க்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது என உக்ரைன் பாதுகாப்புத்துறை சமீபத்தில் குற்றம் சாட்டியது. 

இந்நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்கீவ் நகரில் ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள பள்ளிக்கூடம் இடிந்து சேதமானது. 

தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் பணியினர் 3 உடல்களைக் கைப்பற்றினர். மேலும் காயமடைந்த 23 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மீட்புக்குழு தெரிவித்தது.

ரஷிய ராணுவம் பள்ளிக்கூடம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது என உக்ரைன் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!