தேனிலவு சென்றபோது மனைவியை கொலை செய்து விட்டு படகு வழியாக தப்பிய கணவர்
தேனிலவு சென்றபோது மனைவியை கொலை செய்து விட்டு படகு வழியாக கணவர் தப்பி சென்று சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு பசிபிக் கடலில் பிஜி என்னும் நாட்டில் நூற்றுக்கணக்கான தீவுகள் இருக்கிறது. அங்கே சுற்றுலா தளங்களும் அதிகம் இருக்கின்றன. எனவே, அதிகமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தருவதுண்டு. இந்நிலையில் அமெரிக்க நாட்டில் வசிக்கும் பிரட்லி ராபர்ட் டாசன்- கிரிஸ்டி ஜியோன் சென் என்ற தம்பதி கடந்த ஏழாம் தேதி அன்று பிஜி நாட்டில் இருக்கும் ட்ருட்லி தீவிற்கு தேனிலவு சென்றிருக்கிறார்கள்.
அங்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த தம்பதிக்குள் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதில் சண்டை முற்றியதால் பிரட்லி, தன் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்திருக்கிறார். அதன் பிறகு, அங்கிருந்து படகு மூலம் வேறு தீவிற்கு தப்பிவிட்டார். அவர்கள் தங்கி இருந்த அறை மறுநாள் வரை திறக்கப்படாமல் இருந்ததால் ஓட்டல் ஊழியர்கள் சந்தேகமடைந்து கதவை திறந்து பார்த்திருக்கிறார்கள்.
அங்கு இரத்த வெள்ளத்தில் கிறிஸ்டினா உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்படி மனைவியை கொலை செய்துவிட்டு வேறு தீவிற்கு சென்ற பிரட்லியை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்து விட்டனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.