இன்றைய வேத வசனம் 23.07.2022: நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 23.07.2022: நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்

கர்த்தருக்குள் பலப்படுங்கள் அவர் உங்களை திடப்படுத்தி தைரியப்படுத்துவார். உங்களுடைய வாழ்க்கையிலும் கூட காணப்படுகிற எல்லா பயங்களையும் நீக்குவார்.

கிதியோன் மீதியானியரை கண்டு மிகவும் பயப்பட்டான். ஆனால், தேவ தூதனோ அவனை பார்த்து பராக்கிரமசாலியே என்று கூப்பிடுகிறார். மீதியானியருக்கு பயந்த கிதியோன் எப்படி பராக்கிரமசாலி ஆக முடியும்? அவனோடுகூட சர்வ வல்ல தேவன் இருந்தார். (#நியாயாதிபதிகள் 6:12,14)

நீங்கள் செல்லும் பாதைகள் ஓவ்வென்றிலும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை பார்த்து பயப்படாதே என்று கூறுகிறார். #எபிரெயர் 13:6ல் நாம் வாசிக்கிறபடி தேவன் எனக்குச் சகாயர் மனுஷன் எனக்கு என்ன செய்வான்.

வாழ்க்கையே முடிந்துபோகும் அளவிற்க்கு உங்களுக்குள்ளே பலவிதமான போராட்டங்கள் இருக்கலாம், இருப்பினும் கர்த்தர் உங்களை பலப்படச் சொல்கிறார் பயப்படச் சொல்லவில்லை.
அவருக்குள் நீங்கள் பலப்படும் பொழுது பெரிய அற்புதங்களையும், அடையாளங்களையும் உங்கள் வாழ்க்கையில் அவர் செய்வார்.

ஆமென்!

ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!