தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள உக்ரைன் மற்றும் ரஷ்யா
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் தானியங்களின் ஏற்றுமதிக்காக கருங்கடல் துறைமுகங்களை மீண்டும் திறக்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்புகள் உண்டானது. இந்த போர் காரணமாக உக்ரைன் நாட்டின் தானியங்கள் ஏற்றுமதியும் பாதிப்படைந்தது. ரஷ்யா கருங்கடல் பகுதி வழியே உக்ரைன், மேற்கொள்ளும் தானிய ஏற்றுமதியை தடுத்தது.
இதனால், உலக நாடுகளில் தானியங்களின் விலை ஏற்றம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து ஐ.நா கருங்கடல் பகுதியை திறக்க இரண்டு நாடுகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் கருங்கடல் துறைமுகங்களை தானிய ஏற்றுமதிக்காக மீண்டும் திறக்கக்கூடிய ஒப்பந்தத்தை செய்திருக்கின்றன. இன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.