பிலிப்பைன்சில் பட்டமளிப்பு விழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு
#GunShoot
#Death
Prasu
2 years ago
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கொடூர தாக்குதலில் மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் நபர் ஏற்கனவே விசாரணைக் கைதியாக போலீஸ் காவலில் இருந்தவர் என தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவின்போது துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பிலிப்பைன்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.