“லாம்டா தொழில்நுட்பம்” மனிதனுக்கு ஆபத்து விளைவிக்குமா? விளக்கம் அளித்த google நிறுவனம்
லாம்டா தொழில்நுட்பம், மனிதர்களைப் போல் சந்தோசம், துக்கம் என பல்வேறு உணர்ச்சிகளைக் கொண்டது என பிளேக் கூறியுள்ளார்.
மனிதர்களுடன் சக மனிதனைப் போல அனைத்து விஷயங்களையும் உரையாடும் வகையில் “லாம்டா” என்ற பெயரில் மொழி சார்ந்து இயங்கக்கூடிய அதிநவீன செயற்Googleகை நுண்ணறிவு தொழிநுட்பத்தை கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த கூகுள் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை உருவாக்கும் குழுவில் பொறியாளரான பிளேக் லெமோயின் என்பவர் பணியாற்றினார். இவர் லாம்டா தொழில்நுட்பம் குறித்து பல்வேறு அதிர்ச்சியுட்டும் தகவலையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
இந்த லாம்டா தொழில்நுட்பம், மனிதர்களைப் போல் சந்தோசம், துக்கம் என பல்வேறு உணர்ச்சிகளைக் கொண்டதாக இருக்கும். இதனால் மனிதர்கள் வருங்காலத்தில் பல்வேறு ஆபத்துக்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த கூகுள் நிறுவனம், பிளேக் லெமோயினுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கி அவரை வீட்டுக்கு அனுப்பியது.
இந்த நடவடிக்கை குறித்து விளக்கமளித்துள்ள கூகுள் நிறுவனம், பிளேக் லெமோயின் தொடர்ந்து மன்னிக்க முடியாத குற்றங்களை செய்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் விதிகளையும், தரவு பாதுகாப்பு கொள்கைகளையும் மீறியதால் அவரை பணியிலிருந்து நீக்கியதாக தெரிவித்துள்ளது.
அதே சமயம் லாம்டா தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் உரையாடலை புரிந்து கொண்டு பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இது அதிநவீன நுண்ணறிவு தொழில்நுட்பம் என்று கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.