அனர்த்தத்தின் மத்தியிலும் அச்சமின்றி நாட்டைக் கைப்பற்றிய ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்: பல்பொல விபாசி தேரர்

Prathees
2 years ago
அனர்த்தத்தின் மத்தியிலும் அச்சமின்றி நாட்டைக் கைப்பற்றிய ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்: பல்பொல விபாசி தேரர்

நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட தற்போதைய ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்க நாட்டை கட்டியெழுப்ப கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென வணக்கத்திற்குரிய பல்பொல விபாசி நாயக்க தேரர் கூறுகிறார்.

போராட்டங்களை நடத்தி ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும் முறையை விட்டுவிட்டு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை விடுவித்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு பேரழிவை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் தற்போதைய ஜனாதிபதி அச்சமின்றி சவாலை ஏற்றுக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், சகல சவால்களையும் வெற்றிகொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 24ஆம் திகதி பிற்பகல் சேடவத்த, வெஹெரகொட புராதன விகாரைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், அங்கு உபதேசம் செய்து இதனைக் குறிப்பிட்டார்.