அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து தலைவர் காலமானார்

#Death
Prasu
2 years ago
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து தலைவர் காலமானார்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டின் முதல் மந்திரியாக இருந்த டேவிட் டிரிம்பிள் காலமானார் .

அவர் மறைந்துவிட்ட செய்தியை அவரது குடும்பத்தினர் நேற்று உறுதிபடுத்தியுள்ளனர் என டிரிம்பிளின் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. 

டேவிட் டிரிம்பிளின் முயற்சியால் 1998-ம் ஆண்டு பெல்பாஸ்ட் ஒப்பந்தம் நிறைவேறியது. மேலும், அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என்று போற்றப்படுபவர் ஆவார். 

பெல்பாஸ்ட் பகுதிகளில் 30 ஆண்டாக நீடித்து வந்த செக்டேரியன் வன்முறையில் சுமார் 3,600 பேர் பலியானார்கள். 

அங்கு கலவரத்தை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலைநிறுத்த டேவிட் டிரிம்பிள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவருக்கு 1998-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!