கனடாவில் துப்பாக்கி சூடு- இருவர் மரணம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான் கூவர் நகரில் வீடற்ற மக்கள் சாலைகளில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை நோக்கி மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள்.
ஆனால் மர்ம நபர் சுட்டத்தில் சிலர் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அப்போது போலீசாரை நோக்கி மர்ம நபர் தாக்குதல் நடத்தினார். இதையடுத்து அவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 2 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மர்ம நபர் குறித்த விவரங்களையும், துப்பாக்கி சூடுக்கான காரணத்தையும் போலீசார் வெளியிட வில்லை.
இது தொடர்பாக போலீஸ் தலைைம அதிகாரி காலிப் பயானி கூறும்போது, துப்பாக்கி சூடுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்.
துப்பாக்கி சூடு நடத்தியவருக்கும் பலியானவர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருந்ததா என்பது குறித்து தெரியவில்லை.
ஆண் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றார்.
அமெரிக்காவை ஒப்பிடும்போது கனடாவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பது அரிதானது. ஏனென்றால் அந்நாட்டில் துப்பாக்கி வாங்க கடும் கட்டுப்பாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.