இங்கிலாந்தில் நிலவிவரும் அதீத வெப்பமும் வறண்ட காலநிலையும்
Prasu
2 years ago
இங்கிலாந்து நாட்டில் தற்போது அதீத வெப்பமும் வறண்ட காலநிலையும் நிலவி வருகின்றது. இங்கு போதுமான அளவு மழையும் பெய்யவில்லை. இந்த நிலை தொடரும் என்றால் இங்கிலாந்தில் சில பகுதிகள் வறட்சியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கிலாந்தில் அதிக வெப்பநிலை தொடர்ந்து நிலவி வருவதால், புற்கள் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றது.
ஆறுகளில் நீரோட்டம் குறைந்து காணப்படுகின்றது. ஒரு சில குளங்கள் முற்றிலும் வற்றிய நிலையில் காணப்படுகின்றது. இதுவரை இல்லாத அளவு கடந்தவாரம் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை எட்டியதால் ஏற்கனவே வறட்சியை நோக்கி சென்று கொண்டிருந்த இடங்கள் தற்போது மோசமான நிலையை எட்டியுள்ளதாக இங்குள்ள சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.