விமான உணவில் பாம்பு தலை - அதிர்ச்சியில் பயணிகள்
துருக்கியின் அங்காராவில் இருந்து ஜெர்மனியின் டுசெல்டார்ப் என்ற பகுதிக்கு சன் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் பயணிகளோடு சென்றது. அப்போது விமானத்தில் பயணிகளுக்கு வழக்கம் போல உணவு வழங்கப்பட்டது.
இதில் அலுவலக நண்பர்களோடு பயணம் செய்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்துள்ளது. இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் இது குறித்து வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் விமானத்தில் உணவு வழங்கிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து சன் எக்ஸ்பிரஸ் உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளது.
மேலும் விமானத்தில் வரும் பயணிகளுக்கு முன்னுரிமை அளித்து தரமான சேவை வழங்குவது நிர்வாகம் உறுதி செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளது.