அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 27.07.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 27.07.2022

மேஷம்
அசுவினி: நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.
பரணி: நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
கார்த்திகை 1: பணியில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். வருவாய் அதிகரிக்கும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
ரோகிணி: வியாபாரத்தில் திருப்பம் உண்டாகும். எதிர்பாராத லாபம் ஏற்படும்.
மிருகசீரிடம் 1, 2: பழைய கடன்களை பைசல் செய்வீர்கள். நிதிநிலை உயரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: புதிய முயற்சிகள் இழுபறியாகும். செயல்களில் தடுமாற்றம் உண்டாகும்.
திருவாதிரை: உங்கள் எதிர்பார்ப்புகள் தள்ளிப் போகும். மனதில் குழப்பம் ஏற்படும்.
புனர்பூசம் 1, 2, 3: பணியில் கூடுதல் கவனம் தேவை. முயற்சி நிறைவேறாமல் போகும்.

கடகம்
புனர்பூசம் 4: உறவினர்களால் சில சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். செலவு அதிகரிக்கும்.
பூசம்: கணவன் மனைவிக்குள் பிரச்னைகள் தோன்றும். வார்த்தைகளில் கவனம் தேவை.
ஆயில்யம்: பணியில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். மேலதிகாரியுடன் மோதல் உண்டாகும்.

சிம்மம்
மகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
பூரம்: விஐபிகளின் ஆதரவுடன் உங்கள் விருப்பம் ஒன்று நிறைவேறும்.
உத்திரம் 1: தடைபட்ட செயல்கள் நிறைவேறும். நிலுவை பணம் வந்து சேரும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை வெற்றி தரும். லாபம் அதிகரிக்கும்.
அஸ்தம்: பணி புரியும் இடத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். மதிப்பு உயரும்.
சித்திரை 1, 2: துணிச்சலுடன் செயல்பட்டு புதிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4: உங்கள் அணுகுமுறையால் நீண்டநாள் பிரச்னையில் தீர்வு உண்டாகும்.
சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
விசாகம் 1, 2, 3: பணியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சக ஊழியர்கள் உதவுவர்

விருச்சிகம்
விசாகம் 4: பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். குழப்பம் தோன்றும்.
அனுஷம்: எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும். வீண் அலைச்சல், செலவு உண்டாகும்.
கேட்டை: பயணத்தில் கவனம் தேவை. பண விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.

தனுசு
மூலம்: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.
பூராடம்: நண்பரால் ஆதாயம் காண்பீர்கள். குடும்பத் தேவையை நிறைவேற்றுவீர்கள்.
உத்திராடம் 1: விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: வியாபாரத்தில் நெருக்கடி விலகும். மறைமுகத் தொல்லை அகலும்.
திருவோணம்: வழக்கு உங்களுக்கு சாதகமாகும். விரோதிகள் விலகிச் செல்வார்கள்.
அவிட்டம் 1, 2: பணியில் உங்கள் நிலை உயரும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பொன் பொருள் சேரும்.
சதயம்: உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை விலகும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். குடும்பத் தேவை பூர்த்தியாகும்.

மீனம்
பூரட்டாதி 4: எதிர்பார்ப்பு நிறைவேறும். நீங்கள் விரும்பிய ஒன்றை போராடி அடைவீர்கள்.
உத்திரட்டாதி: பணியிடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். அமைதி காப்பது நல்லது.
ரேவதி: வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு முடிவு காண்பீர்கள்.