பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறை லெப்.கேணல் விக்ரர் நினைவாக நடத்திய உதைபந்தாட்ட போட்டியில் சுவிஸ் அணியின் 15 வயதுப்பிரிவு அபார வெற்றி

Kanimoli
2 years ago
பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறை லெப்.கேணல் விக்ரர் நினைவாக நடத்திய  உதைபந்தாட்ட  போட்டியில் சுவிஸ் அணியின் 15 வயதுப்பிரிவு  அபார வெற்றி

எதிர்த்தாடிய அணிகளை பூஜ்ஜியத்தில் வைத்து வெற்றி.
இராஜ்யம் அமைத்த சுவிஸ் வெற்றிச்செல்வர்கள் .சென்றார்கள் : வென்றார்கள் :வந்தார்கள் :

வாருங்கள் அந்த வெற்றித்தருணத்தைப்பார்ப்போம்.
சுருக்கமாக_

பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறை லெப்.கேணல் விக்ரர் நினைவு சுமந்து  அனைத்துலக ரீதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய  உதைபந்தாட்ட  போட்டியில் சுவிஸ் தெரிவு அணியின் 15 வயதுப்பிரிவின்  வெற்றிச்செல்வர்களே! மேற்படி அபார வெற்றியை தனதாக்கினார்கள்.

ஆரம்ப ஆட்டமே அதிர்ந்தது..
_________
ஆரம்ப ஆட்டங்களிலே சுவிஸ் வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை இறக்கி மிரள வைத்து விட்டனராம்.

ஒவ்வொரு எதிர் அணிகளையும்" 0 "
என்ற நிலையிலே வைத்தவாறு சராமரியாக கோல்களை  அடித்து துவம்சம் செய்தவாறு முன்னேறி  இறுதியாட்டத்தில் பிரான்ஸ் தமிழர் விளையாட்டுக்கழகம் 93 அணியினரோடு இறுதிக்களமாடி இரு அணிகளும் கோல்கள் எதையும் பெற்றிராத நிலையில் சமநிலை உதைப்பில் 03.02 என்ற கோல் கணக்கில் சுவிஸ் தெரிவு அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கினர். 

அனைத்து வீரர்களும் அனைவரும் வியந்து _ மிரண்டு பார்க்குமளவில் 
அபார ஆட்டநாயகர்களாக களமாடினார்கள். அத்தனை வீரர்களுக்கும் மனநிறை வாழ்த்துக்கள்.

பந்து காப்பாளர் கிருவரனை
பலரும் பாராட்டினார்கள்.

இறுதியாட்ட நாயகனாக கிருவரன் தெரிவானான்.
கிருவரன் _ எங்களுக்குள்ளும் ஒரு 
சுவிஸ் அணி பந்து காப்பாளர் _Yaan  sommer _
போன்று ஒருவன் உருவாகிறான். என்பதை பல களங்களில் நிருபித்து வருகிறான். என்பதை அவதானிக்க முடிந்தது .
வாழ்த்துக்கள் . எதிர்கால Yaan sommer இற்கு (கிருவரன் ) 

சிறந்த வீரனாக லக்சன் தெரிவானார்.
இனிய வாழ்த்துக்கள் லக்சனுக்கும்.
இந்த வெற்றிக்கு பின்னால் இவர்கள்.
வீரர்களை உற்சாகப்படுத்தி பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய 
பாலா அண்ணைக்கு நன்றிகள் பலகோடி

வீரர்களை தெரிவு செய்து அணியாக்கி ஒழுங்கமைத்து சரியான திட்டமிடலுடன் பெற்றோர்களுக்கு அவ்வப்போது தகவல்களை வழங்கி .
வீரர்களை அழைத்துச்சென்று வெற்றிக்களத்தில்  இறக்கி வெற்றிவாகை சூட வைத்த சுவிஸ் தமிழர் இல்ல பொறுப்பாளர் திரு. சிவகுருநாதன் மதியழகன் அவர்களே.இத்துணை வெற்றிக்குப்பின்னால் நிற்கும் . "வேர்" எனலாம். பெற்றோர் சார்பாக 
மன நிறை நன்றிகள். மதியண்ணைக்கு.

மாபெரும் வெற்றி எனப்படுவது யாதெனில் __
ஒரு அடி கூட வாங்காமல்  நாமே அடித்தோம் என்பதில் தங்கியுள்ளது.
அந்த வெற்றியை எம் வீரர்கள் பதித்துள்ளனர். பிரான்ஷ் மண்ணில்.

வாழ்த்துவோம்  தட்டிக்கொடுப்போம்.

கைதட்டிக்கொடுப்பதும் பாராட்டுவதும் என்பது 
இளம் வீரர்களுக்கு சிறகுகள் கட்டி விடுகிறோம்.  பறப்பதற்கு என்பதாகும். 

இந்த வெற்றிச்செல்வர்களின்.
வெற்றி வேட்டை தொடரும்__ 

தொகுப்பு எஸ்_கவிதரன்