கனடாவில் இரட்டைக்கொலை-இந்திய வம்சாவளியினர் இருவர் கைது
கனடாவில் இந்திய வம்சாவளியினர் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவில் ஒரு கும்பல் தொடர்பான வன்முறையில் இருவரைக் கொன்றதாகக் கூறப்படும் இரண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.குர்சிம்ரன் சஹோடா, 24, மற்றும் தன்வீர் காக், 20, ஆகியோர் மீது திங்களன்று முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில், வன்கூவர் நகரத்தில் உள்ள கிராமமான Whistler-ல் ஞாயிற்றுக்கிழமை காரில் இருந்தபோது மெனிந்தர் தலிவால் மற்றும் சதிந்தேரா கில் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆனால் இந்த சம்பவத்தில் அவர்களுக்கு எந்த அளவிற்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச்சூடு இரு கும்பல் மோதலுடன் தொடர்புடையது என்றும் சந்தேக நபர்களும் பாதிக்கப்பட்டவர்களும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.