697 கிலோ சட்டவிரோதமான போதைபொருட்களை பறிமுதல் செய்த ஈரான் காவல்துறை
ஈரான் நாட்டில் தெற்கே கெர்மன் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சட்டவிரோத போதை பொருள் கடத்தல் பற்றி மாகாண காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு, சட்டவிரோத போதை பொருள் கடத்தல்காரர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களிடமிருந்து 697 கிலோ எடை உள்ள போதை பொருளையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மாகாண காவல் துறை தலைவர் அப்துல்ரெசா நஸ்ரி கூறியதாவது, “இந்த சம்பவத்தில் ஆயுதமேந்திய போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் பெரிய அளவிலான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்.
மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்” என்று அவர் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் .