பிரித்தானிய குடும்பத்திற்கு பங்களாதேஷில் நேர்ந்த கதி - தந்தை மகன் பலி

Prasu
2 years ago
பிரித்தானிய குடும்பத்திற்கு பங்களாதேஷில் நேர்ந்த கதி - தந்தை மகன் பலி

பிரித்தானியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் உடலுக்கு விஷமேறிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குடும்பத்தினர் பங்களாதேஷ் நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாகும்.

இந்த நிலையில் பங்களாதேஷ் சென்றிருந்த குடும்பத்தினர் இவ்வாறு விஷமேறிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 5 பேரில் இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் மேலும் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு நகரமான Sylhetக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பில் இந்த குடும்பம் தங்கியிருப்பதாக பங்களாதேஷ் பொலிசார் தெரிவித்தனர்.

இன்று காலை உறவினர்கள் வழங்கிய தகவலுக்கமைய, அந்த கட்டத்திற்கு நுழைந்த பொலிஸார் உயிரிழந்த நிலையில் இருந்தவர்களையும் மயக்கமடைந்த நிலையில் இருந்தவர்களையும் அவதானித்துள்ளனர்.

இதன் போது தந்தை ரோபிகுல் இஸ்லாம் என்ற 51 வயதுடைய நபர் மற்றும் அவரது மகன் மஹிகுல் என்ற 16 வயதுடையவர்  உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

இதன் போது அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Riverside பகுதியைச் சேர்ந்த இந்த குடும்பம், இரண்டு மாத பயணமாக பங்களாதேஷ் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹுஸ்னாரா என்ற 45 வயதுடைய பெண்ணும், சாதிகுல்  24 வயதுடைய மகள் மற்றும் சமிரா என்ற 20 வயதுடைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

திங்கள்கிழமை இரவு ஐந்து குடும்ப உறுப்பினர்களும் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், காலை 10 மணியளவிலும் ஒருவரும் எழுந்திருக்காத நிலையில் அயலவர்கள் மற்றும் உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

முதலில் இந்த சம்பவம் உணவில் விஷம் கலந்திருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், தற்போது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!