ஜெர்மனியில் 1,000 விமானங்களை ரத்து செய்த லுப்தான்சா நிறுவனம்
Prasu
2 years ago
ஜெர்மனியின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் லுப்தான்சா. உள்நாட்டிலும் ஐரோப்பா முழுவதிலும் அதிகப்படியான விமான சேவைகளை வழங்கி வரும் இந்த நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையில் ஐரோப்பாவின் 2-வது பெரிய விமான நிறுவனமாக உள்ளது.
இந்த நிலையில் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் லுப்தான்சா நிறுவனம் 1,000-க்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.
இதன்காரணமாக சுமார் 1,34,000 பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை மாற்ற அல்லது முழுவதுமாக ரத்து செய்ய வேண்டியிருந்தது.