தவறான விளம்பரம் செய்ததற்காக சாம்சங் நிறுவனத்திற்கு 14 மில்லியன் டாலர் அபராதம்

Prasu
2 years ago
தவறான விளம்பரம் செய்ததற்காக சாம்சங் நிறுவனத்திற்கு  14 மில்லியன் டாலர் அபராதம்

பிரபல சாம்சங் நிறுவனம் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை S7, Note 8, S8 plus, S8, A7, A5, S7 Edge, S7 ஆகிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியது. 

இந்த 7 மாடல் மொபைல் போன்களை தண்ணீரில் போட்டாலும், கடல் நீரில் போட்டாலும் எதுவும் ஆகாது என்று சாம்சங் நிறுவனம் விளம்பரம் செய்தது. 

ஆனால் செல்போன் ஈரமாக இருக்கும் போது சார்ஜ் போட்டால் சார்ஜ் போர்டு உடனடியாக சேதம் அடைந்து விடுவதாக கூறப்பட்டது. 

இதுகுறித்து ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஆஸ்திரேலிய ஃபெடரல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தவறான விளம்பரம் செய்த காரணத்திற்காக சாம்சங் நிறுவனத்திற்கு 14 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது. 

இது இந்திய மதிப்பில் 78 கோடி ரூபாய் ஆகும். அதன் பிறகு தேசிய நுகர்வோர் ஆணையத்திற்கு 1.4 லட்சம் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மேலும் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்திய 7 மொபைல் போன்களுக்கும் தவறான விளம்பரங்களை ஒளிபரப்பியதை ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது வந்த மொபைல் போன்களில் அது போன்ற எவ்வித பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!