மெக்சிகோவில் கோர விபத்து - 9 பேர் உயிரிழப்பு

#Mexico #Accident #Death
Prasu
2 years ago
மெக்சிகோவில் கோர விபத்து - 9 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் சரக்கு லாரியும் தனியார் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோ நாட்டில் தெற்கே குர்ரிரோ கோஸ்டா கிராண்ட் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அகாபல்கோ-ஜிகுவாதனிஜோ என்ற நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்றை தனியார் வாகன ஓட்டுனர் ஒருவர் முந்தி செல்ல முயன்றுள்ளார். 

இருப்பினும் சரக்கு வாகனத்தின் பின்புறம் இவரது கார் மோதியுள்ளது. அப்பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த இவரது வாகனம் சாலையில் எதிர்பக்கம் உள்ள பகுதிக்கு சென்றுள்ளது.

இதனை தொடர்ந்து எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்திற்குள்ளானது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்  மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. 

இதனால் அப்பகுதியில் ஒரு  மணிநேரத்திற்கும் மேல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!