நாடாளுமன்றத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈராக் மக்கள்

#Protest #Parliament #Iraq
Prasu
2 years ago
நாடாளுமன்றத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈராக் மக்கள்

ஈராக் நாட்டின் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதரின் ஆதரவாளர்களான நூற்றுக்கணக்கானோர் பாக்தாத்தில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டுள்ளனர். ஈரானிய ஆதரவு கட்சிகளால் முன்னிறுத்தப்பட்டுள்ள பிரதமர் வேட்பாளருக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.  

இங்கு உச்ச பாதுகாப்பு வளையத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சம்பவத்தின் போது உறுப்பினர்கள் எவரும் காணவில்லை என்று கூறப்படுகின்றது. அப்பொழுது பாதுகாப்புப்படையினர் மட்டுமே  காணப்பட்டுள்ளனர். 

அவர்களும் சம்பவத்தின் தன்மை கருதி ஆர்ப்பாட்டக்காரர்களை நாடாளுமன்றத்தில் அனுமதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னாள் அமைச்சரும் முன்னாள் மாகாண ஆளுநருமான முகமது ஷியா அல்-சுடானியின் வேட்புமனுவுக்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ஈரானிய ஆதரவு கட்சிகளால் அவர் முன்னிறுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்தே அவர் மீதான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையில் உச்ச பாதுகாப்பு வளையத்திலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என பிரதமர் முஸ்தபா அல்-காதிமி அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த பகுதியானது அரசாங்க அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் குடியிருக்கும் வளாகமாகும். இதனை தொடர்ந்து ஷியா  தலைவர் முக்தாதா அல்-சதரின் கட்சி கடந்த அக்டோபர் மாதம் 2021ல் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 329 எண்ணிக்கையில் 73 ஆசனங்களை கைப்பற்றியிருந்தது.

ஆனால் அதன் பின்னர் புதிய அமைச்சரவை அமைக்கும் நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படாமல் இருந்து வருகின்றது. இது மட்டுமின்றி, அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் அல்-சதர் பங்குபெறாமல் ஒதுங்கிக்கொண்டார். 

கலவரங்களை ஒதுக்கும் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் தடைகளை மீறி நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்துள்ளதாகவே கூறப்படுகின்றது.