குற்றங்கள் நிகழாமல் தடுக்க மரண தண்டனையை நேரலை ஒளிபரப்ப எகிப்து கோர்ட் அறிவுறுத்தல்

Prasu
2 years ago
குற்றங்கள் நிகழாமல் தடுக்க மரண தண்டனையை நேரலை ஒளிபரப்ப எகிப்து கோர்ட் அறிவுறுத்தல்

இது போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கு மரண தண்டனை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புமாறு நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

எகிப்தில் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்று வரும் சக மாணவியை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதித்த கோர்ட் அந்த மரண தண்டனையை நேரலையில் ஒளிபரப்பு செய்ய அறிவுறுத்தி இருக்கின்றது. 

கடந்த மாதம் வடக்கு எகிப்த்தில் உள்ள மன்சூரா பல்கலைக்கழகத்திற்கு வெளியே சக மாணவி நயேரா அஷ்ரப்பை கொன்றதாக 21 வயதான மொஹமட் அடெல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் தன்னுடைய திருமண விருப்பத்தை மாணவி நிராகரித்ததால் இதனை செய்திருக்கின்றார்.

இதனால் அவருக்கு கடந்த ஜூன் 28ஆம் தேதி அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் அந்த மரண தண்டனை நிறை வேற்றுவதை நேரடியாக ஒளிபரப்புமாறு அரசிற்கு அறிவுறுத்தி இருக்கின்றது. எதிர்காலத்தில் 

இது போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்காக அவரது மரண தண்டனையை  தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு மாறு நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதி இருக்கின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!