கல்முனையில் 505 g கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

#SriLanka #drugs #Arrest
Prasu
2 years ago
கல்முனையில் 505 g கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

மோட்டார் சைக்கிளில் 505 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திய சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

வியாழக்கிழமை (28) இரவு விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்முனை பகுதியை சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் மேற்குறித்த போதைப்பொருளை கடத்தி செல்வதற்காக தயாராக இருந்த வேளை அம்பாறை மாவட்டம் கல்முனை வாடிவீட்டு வீதியில் வைத்து சந்தேக நபர் கைதானார்.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து தொலைபேசி ஒன்று, 505 கிராம் பொதி செய்யப்பட்ட கேரளா கஞ்சா, ஒரு தொகை பணம், பல்சர் ரக மோட்டார் சைக்கிள் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் கல்முனை பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!