நானும் மனிதன் தான் என்னை மதியுங்கள் - வேதனைப்படும் இளைஞர்
பிரான்ஸ் நாட்டில் ஒரு இளைஞர் வேற்று கிரகவாசியாக மாற நினைத்து உடலில் மாற்றங்களை மேற்கொண்ட நிலையில் தான் அனுபவிக்கும் வேதனைகள் மற்றும் பிரச்சனைகளை பகிர்ந்திருக்கிறார்.
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் அந்தோனி லோஃப்ரெடோ 34 வயது இளைஞர் திரைப்படங்களில் வருவது போன்று வேற்றுகிரகவாசியாக தன்னை நினைத்துக் கொண்டார். எனவே, அதற்கு ஏற்றவாறு தன் உடலில் பல்வேறு மாற்றங்களை செய்தார். தன் உடலில் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு வேற்றுகிரகவாசி போல் மாறிவிட்டார்.
மேலும், தன் இடது கை வித்தியாசமான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று செயற்கையாக வளையங்களை ஏற்படுத்தினார். இது மட்டுமல்லாமல் நாக்கை இரண்டு துண்டுகளாக்கி, உதடு, காது மற்றும் மூக்குகளையும் வெட்டியிருக்கிறார். தன் தலை முதல் பாதம் வரை உடலின் அனைத்து பகுதிகளிலும் டாட்டூ குத்தியிருக்கிறார்.
ஆங்கில திரைப்படங்களில் வரும் கற்பனை கதாபாத்திரம் போன்று தோற்றமளிக்கும் அவர் தான் பொது இடங்களில் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கூறியிருக்கிறார். நான் வெளியிடங்களுக்கு சென்றாலே மக்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடி விடுவார்கள். குழந்தைகள் “பேய், பேய்” என்று ஓடுவார்கள்.
எனவே மற்றவர்கள் தன்னை பார்க்காமல் இருக்க மறைந்து மறைந்து வாழ்கிறேன். நல்ல விஷயங்களை விட பல அவமானங்களை தான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். பைத்தியக்காரன் என்று மக்கள் கருதுகிறார்கள். இது அதிக வேதனையை தருகிறது. நானும் மனிதன் தான். எனக்கு பணி வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. கொஞ்சமாவது என்னை மதியுங்கள் என்று உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.