சிரியாவில் இரு அமைப்புகளுக்கிடையில் நடந்த மோதலில் 27 பேர் பலி
சிரியாவில் உள்ளூர் ஆயுத குழுக்களுக்கும், அரசு ஆதரவு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரியா நாட்டில் ஸ்வேய்டா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டு போரில் கூட அமைதி நிலவியது. இந்த மாகாணத்தில் வன்முறை சம்பவங்கள் மிகவும் அரிதானந்தாகும். சாலைகளில் பணம் வசூலித்தல் பணத்துக்காக ஆள்களை கடத்தல் போன்ற செயல்களில் அரசு ஆதரவு படைகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பொது மக்களே கொதிப்படைய செய்துள்ளது. இந்த செயலில் பொதுமக்களில் ஒருவரை அரசு ஆதரவு படையினர் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து உள்ளூர் ஆயுத குழுவினருக்கும், அரசு ஆதரவு படையினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இரு குழுக்களுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.