ஐரோப்பாவில் முதலாவது குரங்கு காய்ச்சல் மரணம் பதிவு!

Nila
2 years ago
ஐரோப்பாவில் முதலாவது குரங்கு காய்ச்சல் மரணம் பதிவு!

ஐரோப்பாவில் முதலவாது குரங்கு காய்ச்சல் மரணம் ஸ்பெய்னில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இந்த மரணம் பதிவானதாக ஸ்பெய்ன் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் தெரியவருகையில்,

ஸ்பெய்னில் இதுவரையில் 4,298 குரங்கு காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

குரங்கு காய்ச்சல் தொற்றை, உலகளாவிய சுகாதார அவசர நிலையாக, உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது.

அந்த அமைப்பின் தரவுகளின்படி, குரங்கு காய்ச்சல் காரணமாக, முன்னதாக 5 மரணங்கள் ஆபிரிக்க பிராந்தியத்தில் பதிவாகியுள்ளன.

உலகம் முழுவதும், 78 நாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவியுள்ளது.

கடந்த மே மாதம் முதல், ஆபிரிக்காவுக்கு வெளியே உள்ள பிராந்தியங்களில், இதுவரையில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அவர்களில், 70 வீத நோயாளர்கள் ஐரோப்பாவிலும், 25 வீத நோயாளர்கள் அமெரிக்காவிலும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது