சூரிச் உயிரியல் பூங்காவில் வைரஸ் தொற்றால் மூன்று யானைகள் மரணம்

Prasu
2 years ago
சூரிச் உயிரியல் பூங்காவில் வைரஸ் தொற்றால் மூன்று யானைகள் மரணம்

யானைகளுக்கு கொடிய வைரஸ் தொற்று பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் மாகாணத்தில் உயிரியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் உள்ள யானைகளுக்கு EEHV என்ற கொடிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த கொடிய வகை வைரஸ் தொற்றின் காரணமாக 2 வயது, 5 வயது மற்றும் 8 வயதுடைய 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் மின்னல் வேகத்தில் பரவும் வைரஸ் தொற்றினால் யானைகளின் உடல் உறுப்பில் உள்ள பாகங்கள் செயலிழந்து ரத்த கசிவு ஏற்பட்டு உடனடியாக உயிரிழந்து விடுகிறது.

இந்த வைரஸ் தொற்று எப்படி பரவுகிறது என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த வைரஸ் பரவலை எப்படி தடுப்பது என்று தெரியாமல் மருத்துவர்கள் திணறிக் கொண்டு இருக்கின்றனர்.

மேலும் ஏற்கனவே யானைகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் அடுத்தடுத்து 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.