கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணியாளர்கள், தாதியர்கள் என 264 போருக்கு 10kg வீதம் அரிசி வழங்கப்பட்டது

Prasu
2 years ago
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணியாளர்கள், தாதியர்கள் என  264 போருக்கு 10kg வீதம் அரிசி வழங்கப்பட்டது

நாட்டில் அண்மைக்காலமாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் அரிசி விலையேற்றம்  என்பன காரணமாக பெரும் இக்கட்டான நெருக்கடியினை சகலரும் சந்தித்து வருகின்றனர்   

இடர் மிகுந்த காலத்தில் மாவட்ட மக்கள் நலன் கருதி வைத்தியசாலை பணியாளர்கள் ஆற்றி வரும் மகத்தான மானிடம் மிக்க  மருத்துவ  சேவையினை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்  இவ் பேரிடர் மிகுந்த காலத்தில் அவர்கள்  ஆற்றி வரும் சேவையினை  நாம் அறிவோம்  

அந்த வகையில் சுகாதார ஊழியர்களின்  சேவையினை கருத்தில் கொண்டு  மருத்துவ சேவையின் முக்கியத்துவம் காரணமாக  இன்றைய தினம் கிளிநொச்சி "வைத்தியசாலை"  சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு S.K.நாதன் அவர்களினால் இன்றைய தினம் 31.07.2022   இவ்நிவாரண பணி  மேற்கொள்ளப்பட்டது

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் Dr.S.சுகந்தன், Dr.தவராஜா மற்றும் ஏனைய வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் பணியாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

மிக விரைவில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என பல மாவட்டங்களில் அன்றாடல் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சாசாரண மக்கள், கூலித் தொழிலாளர்களுக்கும் என கட்டம் கட்டமாக நிவாரண பணி  மேற்கொள்ளப்படவுள்ளது.