QR முறைக்கமைய எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

Prabha Praneetha
2 years ago
QR முறைக்கமைய எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, இன்று முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் QR முறை மற்றும் கோட்டாவின் கீழ் மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும்.

நேற்று பிற்பகல் நிலவரப்படி, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக சுமார் 5 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டில் உள்ள மொத்த எரிபொருள் நிலையங்களில் 95 வீதமானவை QR முறையை பின்பற்றியுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

QR முறையைப் பின்பற்றும் எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் எரிபொருள் இருப்புகளிலிருந்து QR குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்கப்படுவது குறித்து கண்காணிக்கப்பட்டு எதிர்காலத்தில் விநியோகம் இடம்பெறும் எனவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.