சீனாவின் கடுமையான எச்சரிக்கையை மீறி தாய்வானில் தரையிறங்கிய அமெரிக்க சபாநாயகர்

#world_news
Kobi
2 years ago
சீனாவின் கடுமையான எச்சரிக்கையை மீறி தாய்வானில் தரையிறங்கிய அமெரிக்க சபாநாயகர்

ஆசிய பிராந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகவே அமெரிக்க அதிகாரி பெலோசி தாய்வானில் சற்று நேரத்துக்கு முன்னர் தரையிறங்கியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த பயணத்துக்கு விருப்பம் வெளியிடாத நிலையில் பெலோசி பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது, பல தசாப்தங்களுக்கு பின்னர் தாய்வானுக்கு மேற்கொள்ளப்படும் மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவரின் முதல் பயணமாக கருதப்படுகின்றது.

சீனா, தாய்வானை பிரிந்து சென்ற மாகாணமாக பார்க்கின்றது. அது சீனாவுடன் சேர வேண்டிய பகுதி என்றும் சீனா கூறி வருகின்றது.

இந்நிலையில்,பெலோசியின் தாய்வான் பயணம், ஆத்திரமூட்டி, ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் என்று ரஷ்யாவும்,சீனாவும் அமெரிக்காவை எச்சரித்துள்ளன.

இதற்கிடையில்,சீனாவின் எஸ்யு-35 போர் விமானங்கள் தாய்வானை நோக்கி செல்வதாக அந்த நாட்டு அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.