இன்றைய வேத வசனம் 03.08.2022: நான் ஒருவனுடைய முகத்தைப் பாராமலும்இ ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 03.08.2022: நான் ஒருவனுடைய முகத்தைப் பாராமலும்இ ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக

முதலாம் வகுப்பில் படித்த நீதிக்தையை நினைவுப்படுத்துவோம்.

அலகில் வடை ஒன்றை கவ்விக் கொண்டிருந்த காக்காயிடமிருந்து அதை அபகரிக்க வந்த தந்திர நரி, காக்கையிடம் காகமே நீ எத்தனை அழகு! கருகருவென்ற உன் இறகும், துருதுருவென்ற உன் கண்களும் என் உள்ளத்தை கொள்ளை கொண்டுவிட்டன.

கா, கா என்று நீ கத்தும் குரல் அநேக முறை என்னை கவர்ந்துள்ளது. உன் அழகை காணவும், உன் குரலை கேட்கவும் ஓடோடி வந்தேன் பாடல் ஒன்று பாடமாட்டாயா?

என்று கூற, பேதையான காகம் நினைத்ததாம் ஆகா நான் தான் எத்தனை அழகு என் குரலுக்கு எத்தனை ரசனை பாடத்தான் போகிறேன் என்று பேச்சில் மயங்கிய காகம் பாடத் தொடங்கவே,

நடந்தது தெரியும் வடையும் வீழ்ந்தது, வஞ்சக நரியும் வடையுடன் புதரில் மறைந்தது. வருந்தியது காகம்..

அருமையான தேவபிள்ளைகளே, உன் முகத்துக்கு முன்னே உன் அழகை, பண்பை, பதவியை, படிப்பை திறமையை மிகைப்படுத்திப் இச்சக வார்த்கைளை பேசும் நபர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

இல்லையேல், நரியை போல உங்களிடமிருந்து எதையாவது அபகரித்துக் கொள்ளுவார்கள்..

நீங்களும் தேவனை துதிக்கிற நாவாலே வஞ்சகமான இச்சக வார்த்தைகளை பேசாமலும் எச்சரிக்கையாயிருங்கள். ஆமென்!!

யோபு 32:21

நான் ஒருவனுடைய முகத்தைப் பாராமலும், ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!