ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து ரணிலுக்கு வந்த அழைப்பு
Mayoorikka
2 years ago
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜனாதிபதி Sheikh Mohamed bin Zayed Al Nahyan, மற்றும் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதற்கு ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இலங்கையை ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானத்தை நோக்கி இட்டுச் செல்வதிலும், கடந்து வரும் இக்கட்டான சூழ்நிலைகளை முறியடிப்பதிலும் ரணில் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார்.
இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து விவாதித்தனர்.
ஐக்கிய அரபு அமீரகம் ஒரு அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது.