காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு கால அவகாசம்
Prathees
2 years ago
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் இன்னும் ஆக்கிரமித்துள்ள போராட்டப் பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கு வெள்ளிக்கிழமை (5) மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
காலிமுகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் பயிர்ச்செய்கைகள் உடனடியாக அகற்றப்பட்டு, நாட்டில் தற்போதுள்ள சட்டங்களுக்கு அமைவாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்
பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.