அல் கொய்தா தலைவர் கொலை - அதிபர் ஜோ பைடனுக்கு ஒபாமா பாராட்டு

#America #Biden
Prasu
2 years ago
அல் கொய்தா தலைவர் கொலை - அதிபர் ஜோ பைடனுக்கு ஒபாமா பாராட்டு

அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மான் அல்-ஜவாரி. அவரை அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு, கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தேடி வந்தது. 

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத இயக்க தலைவர் அய்மான் அல்-ஜவாரி கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று அறிவித்தார். 

இந்நிலையில், அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார். 

இதுதொடர்பாக ஒபாமா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், செப்டம்பர் 11 தாக்குதலுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரும், அல்-கொய்தாவின் தலைவரான அய்மான் அல்-ஜவாரி இறுதியாக நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். 

அதிபர் பைடனின் தலைமைக்கு பாராட்டுக்கள். இந்த தருணத்திற்காக பல பத்தாண்டுகளாக உழைத்த உளவுத்துறை அதிகாரிகள் தங்களில் ஒருவருக்கு கூட சிறிய பாதிப்பும் இன்றி இதை நிகழ்த்திக் காட்டியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!