கடந்த ஆண்டில் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் காரணத்தை கூறும் நேபாளத்தின் முன்னாள் பிரதமர்

Prasu
2 years ago
கடந்த ஆண்டில் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் காரணத்தை கூறும் நேபாளத்தின் முன்னாள் பிரதமர்

நேபாளத்தின் முன்னாள் பிரதமரான கேபி சர்மா ஒலி, கடந்த ஆண்டு அவர் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் காரணத்தை கூறினார். நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியாக காலாபானி அமைந்துள்ளது.

இந்தியாவும் நேபாளமும் காலாபானியை தங்கள் பிராந்தியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கோருகின்றன. முன்னாள் பிரதமர் கேபி சர்மா ஒலி அப்போதைய நேபாள பிரதமர்  அரசாங்கத்தின் கீழ் புது தில்லிக்கும் காத்மாண்டுவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் நெருக்கடிக்கு உள்ளாகின. இந்நிலையில், காலாபானி உள்ளிட்ட ஒருங்கிணைந்த நேபாள வரைபடத்தை வெளியிட்டதால் நான் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் என்று நேபாள முன்னாள் பிரதமர் ஒலி தெரிவித்துள்ளார்.

காத்மாண்டுவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சர்மா ஒலி கூறியதாவது, “எனது தலைமையிலான அரசாங்கம் நேபாளத்தின் புதிய வரைபடத்தை வெளியிட்டது. அதில் சர்ச்சைக்குரிய பகுதிகளான கலாபானி, 

லிம்பியாதுரா மற்றும் லிபுலேக் ஆகியவை உள்ளடக்கிய நேபாள வரைபடம் அடங்கும். நேபாளத்திற்கும் கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தான சுகவுலி ஒப்பந்தம்படி, மகாகாளி ஆற்றின் மேற்கில் உள்ள பகுதிகள் நேபாளத்திற்கு சொந்தமானது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. 

ஆனால் இந்த பிரதேசங்கள் நேபாளத்திலிருந்து அகற்றப்பட்டன. மேலும் இந்த பிரதேசங்கள் நேபாளத்தின் பக்கம் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கும் புதிய வரைபடத்தை வெளியிட்ட பிறகு, நான் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்படுவேன் என்பதை நான் நன்கு அறிவேன். அப்படியிருந்தும் அதை நான் வெளியிட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.