ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ரகசிய காதலியின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா

#Russia #Putin
Prasu
2 years ago
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ரகசிய காதலியின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள  அமெரிக்கா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ரகசிய காதலியாக அறியப்படுபவர் அலினா கபெவா. இவர் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான அலினா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார். அதே வேளையில் ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான ஆர்.டி (ரஷ்யா டுடே)-யின் இயக்குனராகவும் அலினா செயல்பட்டு வருகின்றார்.

இதற்கிடையில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ரஷ்ய அதிபர் புதின், ரஷ்ய ராணுவ தளபதிகள், தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்கள் என பல தரப்பின் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றது.

இந்நிலையில் ரஷ்ய அதிபர்  விளாடிமிர் புதினின் ரகசிய காதலியாக அறியப்படும் அலினா கபெவா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. கபெவா பாஸ்போர்ட்டை அமெரிக்கா முடக்கியுள்ளது. மேலும் அவரின் சொத்துக்களையும் முடக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!