GOOGLE நிறுவனத்தின் பணியாளர்களுக்கு CEO சுந்தர் பிச்சை திடீர் எச்சரிக்கை

Prasu
2 years ago
GOOGLE நிறுவனத்தின் பணியாளர்களுக்கு CEO சுந்தர் பிச்சை திடீர் எச்சரிக்கை

Google நிறுவனத்தின் வருமானமானது கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் குறைந்துள்ளதாக சமீபத்தில் அறிக்கை வெளியானது. கடந்த வருடத்தை விட நடப்பு ஆண்டில் 13 சதவீதம் வளர்ச்சி குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிரபலமான பல பெரிய தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவது மற்றும் புதிதாக பணியமத்துவது போன்ற செயல்களை செய்து வந்த நிலையில், தற்போது கூகுள் நிறுவனமும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

இந்த நடவடிக்கையானது பொருளாதார சரிவை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சமீபத்தில் 2 வாரங்களுக்கு புதிதாக பணியாளர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவித்தது.

இதனையடுத்து தற்போது சக்தி வாய்ந்த பணியாளர்கள் கொண்ட ஒரு புதிய குழுவை அமைப்பதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

இது தொடர்பாக CEO சுந்தர் பிச்சை பணியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை நடத்தினார். அப்போது வேலை குறைவாக இருப்பதாகவும் பணியாளர்கள் அதிக அளவில் இருப்பதாகவும் கூறினார். 

அதன் பிறகு வாடிக்கையாளர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், திறமையற்ற பணியாளர்கள் மற்றும் கவன குறைவாக செயல்படும் பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் கூறினார். 

மேலும் திறமை மற்றும் உற்பத்தி பற்றாகுறை காரணமாக நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுவதால் சில பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது ‌

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!