ஜனாதிபதியை சந்திக்கும் சுகந்திரக்காட்சி: ஜனாதிபதியிடம் 7 அம்ச கோரிக்கை முன்வைக்கப்படும்
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
அத்துடன், தமது கட்சி சார்பில் ஜனாதிபதியிடம் 7 அம்ச கோரிக்கை முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.