இன்றைய வேத வசனம்07.08.2022: அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம்07.08.2022: அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்

ஒரு சிறு பெண் தனது மாமாவுடன் வசித்து வந்தாள், ஏனெனில் அவளது பெற்றோர் உடல் நலக் குறைவால் இறந்து விட்டனர்.

அவள் தன் தாயின் வயிற்றில் பிறந்த ஒரே குழந்தை. மழலையர் பள்ளி முதல் 8 ஆம் வகுப்பு வரை அவள் மாமா உதவியால் கல்வி கற்றாள்.

சிறுமி 8 ஆம் வகுப்பில் இருந்தபோது, ஒரு இரவு, அவள் மாமா அந்த சிறுமியின் அறைக்குச் சென்று, அவளை தவறான நோக்கத்துடன் தொட முயன்றார்,

ஆனால் அந்த சிறுமி அவள் மாமாவின் ஆசைக்கு இணங்கவில்லை.. சிறுமி மாமாவின் காலில் விழுந்து அழ ஆரம்பித்தால். மாமாவோ புரிந்துக்கொள்ளவில்லை..

ஆசைக்கு இணங்காததால், தன் மாமாவினால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டால். கல்விக் கட்டணத்தை செலுத்துவதையும் அவள் மாமா நிறுத்திவிட்டார்.

அந்த சிறுமி தனது மாமாவின் இடத்தை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டு, துன்பத்தில் வீதிக்குச் சென்றாள் அழுதுகொண்டே, பசியுடன், தனிமையாக இருந்தாள்.

அவளுக்கு இருந்த கடைசி வழி, முழங்காலில் நின்று, இயேசுவிடம் ஜெபிப்பது மட்டும் தான்.

சாலையோரமாகா முழங்காலில் நின்று ஜெபிக்க ஆரம்பித்தாள் அந்த சிறுமி.

அந்த வழியே வந்த ஒரு பெண் இந்த சிறுமி ஜெபம் செய்வதை பார்த்து சிறுமியிடம் சென்று நீ யார்? சாலையோரம் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று விசாரித்தாள்.

அந்த சிறுமி தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவத்தை கூறினாள். கண் கலங்கிய அந்த பெண் சிறுமியை தன்னுடன் அழைத்து சென்று தொடர்ந்து படிக்க வைத்தாள்.

இன்று அந்த சிறுமி தனது பல்கலைக்கழக படிப்பை முடித்து உலக வங்கியில் பணிபுரிகிறாள்.

அன்று அந்த சிறுமியின் ஜெபத்திற்கு பதிலளித்த தேவன் இன்று உங்கள் ஜெபத்திற்கும் பதிலளிக்க வல்லவராய் இருக்கிறார்.

ஆம்! நம் வல்ல தேவனால் கடலைப்பிளந்து பார்வோனின் சேனையை முறியடிக்கவும் முடியும்! கதறியழும் ஏழையின் கண்ணீரைத் துடைக்கவும் முடியும்.. ஆமென்..

#சங்கீதம் 146:9

அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்