Lanka4.com சிறந்த ஊடகத்துக்கான விருதை லங்கா4 இன் swiss செய்தியாளர் ஓசன்னா ரவி அவர்களுக்கு வழங்கப்பட்டது

Kanimoli
2 years ago
Lanka4.com சிறந்த ஊடகத்துக்கான விருதை லங்கா4 இன் swiss செய்தியாளர் ஓசன்னா ரவி அவர்களுக்கு வழங்கப்பட்டது

LANKA 4 க்கான‌ சிறந்த ஊடக விருதை சுவிஸ் ரவி அண்ணா அவர்களுக்கு வழங்கப்பட்டது
கடந்த 29, 30, 31- 7- 2022 ஆகிய 3 தினங்களாக‌ சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கம்பன் விழாவும், திருவள்ளுவர் விழாவும் அத்துடன் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வும் நடைபெற்றது.  இந்நிகழ்வுகளை உடனுக்குடன் ஊடக அனுசரணை வழங்கி மிகத் திறமையாக செயல்பட்டதற்காக lanka4 செய்தி தளத்திற்கு சிறந்த விருதை புதுச்சேரி முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரும், கம்பன் கழகச் செயலாளருமான வே.பொ. சிவக்கொழுந்து அவர்களும் அவருடன் இணைந்து "வாழும் போதே வாழ்த்துவோம்'' என்ற தத்துவத்தைக் கொண்ட ஸ்ரீ விஷ்ணு துர்கா ஆலய பீடதிபதியும், உலக‌ கம்பன் கழகத் தலைவருமான சுவாமி சரகணபவானந்தா அவர்களும் இணைந்து lanka4 க்கான சிறந்த விருதிற்கான கேடயமும், சான்றிதழையும் சுவிஸ் ரவி அண்ணா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த சிலை திறப்பு விழாவானது சுவாமி அவர்களின் அயராத உழைப்பின் ஒரு வெற்றிகரமான சாதனையாகவே கருதமுடியும். இந்தியாவிலிருந்து வி,ஜி.சந்தோசம் அவர்களால் வழங்கப்பட்ட இந்த ஐந்து அடி உயரமான பிரம்மாண்டமான  திருவள்ளுவர் சிலை கப்பல் மூலம் ஜெர்மனியை வந்தடைந்தது. ஆனால் ஜெர்மனி துறைமுகத்தில் சில சிக்கல்களால் அவை வெளியேற முடியாமல் இருந்தது. சிலை திறப்பு விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்னதாக சுவாமி அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு துறைமுகத்துக்கு உள்ளே போக வேண்டுமென்ற நோக்கத்துடன் 36 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக வாகனத்தில் சென்று அந்த இடத்துக்குப் போகும் போது நேரம் கடந்து விட்டது,  ஆனால் அங்கே சில மின்சார கோளாறினால் கதவு பூட்ட படாமல் இருந்தது. ஆகவே உள்ளே போய் கதைத்து திருவள்ளுவர் சிலையை எடுத்துக் கொண்டு வந்து மீண்டும் சுங்கத் துறையிடம் போனதும் அங்கேயும் சோதனைகளின் போது கதைத்து மிக விரைவாக கொண்டு வந்து சேர்த்தார். இது ஒரு அம்பாளின் மிகப்பெரிய ஒரு அனுக்கிரகத்தால் நடைபெற்றது என்றே சொல்லமுடியும். 
அத்துடன் இந்த சிலையை திறப்பதற்காக லைக்கா குழுமத்தின் உரிமையாளர் திரு சுபாஸ்கரன் அவர்களும் திருமதி பிறேமா சுபாஷ்கரன்  அவர்களும் தனி விமானத்தில் வந்து திறந்து வைத்து விழாவை மிகவும் சிறப்பாக நடாத்தினார்கள். 
அத்துடன் இந்நிகழ்வில் லண்டன் நகரில் இருந்து வந்த  சுப்பர் சிங்கர் பாடகி சிறுமி மாதுளானி அவர்களின் பாடலும் மிகச்சிறப்பாக இடம்பெற்றது 
தொடர்ந்து இந்திய பேராசிரியர் பர்வீன் சுல்தான், மற்றும் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்,  சுவிஸ் நாட்டின் பிரபல்யமான பேச்சாளர்களும் பிரான்ஸ் நாட்டின் பிரபல்யமான பேச்சாளர்களும் இணைந்து சொல்லரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் மிக சிறப்பாக நடைபெற்றது.
 அத்துடன் சிறப்பு விருதுகள் வழங்கும் வைபவமும் இடம்பெற்றது