இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பிரபல அமெரிக்க பாடகி மேரி மில்பென்

#India #America
Prasu
3 years ago
இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பிரபல அமெரிக்க பாடகி மேரி மில்பென்

நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவாக வரும் 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள் தோறும் மூவர்ணக்கொடி பட்டொளி வீசிப் பறக்கவிடப்படுகிறது. 

தலைநகர் டெல்லியில் நடக்க உள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரபல அமெரிக்க பாடகி மேரி மில்பென் பங்கேற்று பாடுகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. 

இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் அழைப்பின்பேரில் அமெரிக்காவின் பிரதிநிதியாக அவர் இங்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மேரி மில்பென் பாடகி, நடிகை, ஊடக ஆளுமை என பல முகங்களை கொண்டவர். ஜார்ஜ் டபுள்யூ புஷ், பராக் ஒபாமா, டொனால்டு டிரம்ப் என 3 அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இசை நிகழ்ச்சி நடத்தி பாடி உள்ளார். 

இந்தியாவின் 'ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே' மற்றும் 'ஜன கண மன' ஆகிய பாடல்களுக்கு பெயர் பெற்றவர், 

இந்த மேரி மில்பென். தனது இந்திய பயணத்தால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிற இவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறி இருப்பதாவது:- மனித உரிமை போராளியான டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ‌ ஜூனியரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, 1959-ம் ஆண்டு அவர் இந்தியாவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டதன் மூலம், இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் அமெரிக்காவின் கலாசார தூதராக பங்கேற்பதில் நான் பெருமை அடைகிறேன்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4