தமிழக அரசினால் வழங்கப்பட்ட பால்மா பொதிகள் காலாவதியாகியுள்ளதாக முறைப்பாடு!

Mayoorikka
2 years ago
தமிழக அரசினால் வழங்கப்பட்ட பால்மா பொதிகள் காலாவதியாகியுள்ளதாக முறைப்பாடு!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழக அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உணவு பொருட்களில் பால்மா பொதிகள் காலாவதியாகியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

குறித்த பால்மா பொதிகள் 3 வயதுக்கு கீழ்ப்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பதுளை உள்ளிட்ட சில பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுள்ள பால்மா பொதிகளில் உற்பத்தி திகதி மற்றும் காலாவதி திகதி என்பன அழிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கடந்த 6ஆம் திகதியுடன் சில பால்மா பொதிகள் காலாவதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 
 இவ்வாறானதொரு சூழலில் காலாவதி திகதி அண்மித்துள்ள பொதிகள் இன்னும் சில பகுதிகளில் மக்கள் உரிய காலத்தில் விநியோகிக்காது களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் சில பிரதேசங்களில் விநியோகிக்கப்பட்டுள்ள பால்மா பொதிகளில், உற்பத்தி மற்றும் காலாவதியாகும் திகதி என்பன குறிக்கப்படும் இடத்தில், அதற்கு பதிலாக, இந்த பொதி விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு பொதிக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இதேவேளை, குறிப்பிட்ட திகதிகள் தெளிவாக புலப்படாத அல்லது அழிக்கப்பட்டிருப்பின் அதனை பொதுமக்களுக்கு விநியோகிக்க முடியாதென்ற நியதி இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள்   தெரிவித்தனர்