நிலைமை கைமீறி சென்றால் முடக்க நிலையை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் அபாயம்

Kanimoli
2 years ago
நிலைமை கைமீறி சென்றால் முடக்க நிலையை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் அபாயம்

 இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், நிலைமை கை மீறி சென்றால் முடக்க நிலையை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் அபாயம் உள்ளதென சுகாதார பிரிவினர் கூறியுடுள்ளனர்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 184 கொவிட் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகஅரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அதோடு இந்த தொற்றாளர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து அடையாளம் காணப்பட்டவர்கள் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து , நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 666,764 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மேலும் மூன்று கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் பதிவான மொத்த கொவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கை 16,586 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி நடந்துகொள்ளுமாறு சுகாதார துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.