ஜனாதிபதிக்கு விடுத்து அச்சுறுத்தலால் இந்த கப்பலின் வருகை நிறுத்தப்பட்டுள்ளது - வாசுதேவ நாணயக்கார

Kanimoli
2 years ago
ஜனாதிபதிக்கு விடுத்து அச்சுறுத்தலால் இந்த கப்பலின் வருகை நிறுத்தப்பட்டுள்ளது - வாசுதேவ நாணயக்கார

எதிர்வரும், 11ம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவிருந்த யுவான் வான் 05 என்ற சீன கப்பலின் வருகையை நிறுத்துமாறு பசில் ராஜபக்ஷவும், (Basil Rajapaksa) ஒரு அமெரிக்கப் பிரதிநிதியும் ஜனாதிபதி ரணிலுக்கு (Ranil Wickremesinghe) அழுத்தம் கொடுத்ததாகத் தகவல் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்

கப்பலை நிறுத்தாவிட்டால் ஜனாதிபதி பதவி பறிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு விடுத்து அச்சுறுத்தலால் இந்த கப்பலின் வருகை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து நாட்டு போர்க்கப்பல்களும் இந்நாட்டின் துறைமுகத்திற்கு வர அனுமதிக்கும் போது, சீன கப்பல் வருவதில் என்ன தவறு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.