ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை குறித்து இன்று முதல் விவாதம்
Kanimoli
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 3ம் திகதி நாடாளுமன்றில் ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பில் இன்று முதல் மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்பட உள்ளது.
இன்றைய தினம் பிற்பகல் 1 மணி முதல் விவாதம் நடத்தப்பட உள்ளது.
கொள்கை விளக்க உரை தொடர்பில் சபை ஒத்திவைப்பின் போது விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல கோரியிருந்தார்.
கொள்கை விளக்க உரை குறித்து மூன்று நாள் விவாதம் நடத்தப்பட வேண்டுமென கட்சித் தலைவர்களும் சபாநாயகரிடம் கோரியிருந்தனர்.
இந்த விவாதம் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
இதேவேளை, இடைக்கால வரவு செலவுத் திட்டம் மற்றும் 22ம் திருத்தச் சட்டம் என்பன குறித்த யோசனைகள் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.