பல போராட்டங்களை நடத்த ஏற்பாடு: காலி முகத்திடலில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!

Mayoorikka
2 years ago
பல போராட்டங்களை நடத்த ஏற்பாடு: காலி முகத்திடலில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!

காலி முகத்திடல் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் நடைபெற்ற இடத்தில் கூடாரம் கட்டிய சிலர் தொடர்ந்தும் அங்கு தங்கியுள்ளதாக  தெரியவந்துள்ளது.

கடந்த நாட்களை ஒப்பிடுகையில் இன்று மிகக்குறைவான கூடாரங்களே எஞ்சியுள்ள நிலையில் இன்று 123வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

மக்கள் இன்று (09) காலி முகத்திடல் போராட்ட மைதானத்திற்கு வராவிட்டால் தானும் ஏனைய மக்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்ட தளத்தில் தங்கியுள்ள வணக்கத்திற்குரிய தம்ம சுஜாத தேரர் நேற்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இன்று பிற்பகல் மற்றும் பிற்பகல் வேளைகளில் போராட்ட தளத்தில் பல போராட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!