கால்வாயில் மர்மமான முறையில் உயிரிழந்தபெண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு
Kanimoli
2 years ago
யக்கலமுல்ல மினுவந்தெனிய பொல்கஹகொட பிரதேசத்தில் உள்ள கால்வாயில் மர்மமான முறையில் உயிரிழந்த இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 35 வயதுடைய இந்தப் பெண் கறுப்பு நிறப் பாவாடை மற்றும் சிவப்பு நிற மேலாடை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெறிச்சோடிய பகுதியில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் சடலத்தின் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
இப் பெண்ணின் சடலம் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , சடலத்தை அடையாளம் காண்பதற்கு யக்கலமுல்ல பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.