தனியார் பேருந்துகளுக்கு தேவையான டீசலை முழுமையாக வழங்க முடிவு!
Mayoorikka
2 years ago
பயணிகள் போக்குவரத்துக்கான தனியார் பேருந்துகளுக்கு தேவையான டீசலை முழுமையாக (Full Tank) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
கடந்த காலங்களில் பயணிகள் போக்குவரத்து தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், இன்று முதல் முழுமையாக பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்றது.
மேலும், இந்த தீர்மானத்தின் மூலம் பல நாட்கள் தொடர்ந்து தங்களது பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியும் என தனியார் பேருந்து ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.