பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு!
Mayoorikka
2 years ago
பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,000 ரூபாயை வழங்குமாறு தீர்ப்பளித்துள்ள உயர்நீதிமன்றம். முதலாளிமார் சம்மேளத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
1000 ரூபாய் சம்பளம் வழங்கும் அரசாங்கத்தின் யோசனையை இரத்து செய்யக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மார்ச் 2021 இல் முதலாளிகள் சம்மேளனம் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவே, இன்று (09) தள்ளுபடி செய்யப்பட்டது.
அத்துடன், நாட் சம்பளமாக 1,000 ரூபாய் வழங்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை 22 கம்பனிகளுமம் கடைப்பிடிக்கவேண்டும். தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியம் 1000 ரூபாயை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.