உரிய நேரத்தில் தீர்வு கிடைக்காத கல்வியால் மாணவர்கள் மத்தியில் அமைதியின்மை! சஜித் ஆதங்கம்
கடந்த இரண்டு வருடங்களாக இலங்கையில் பாடசாலை மாணவர்களின் கல்விக்கு பாரிய இடையூறுகள் ஏற்பட்ட காலப்பிரிவாகும் எனவும், சுமார் ஒன்றரை வருடங்களக நீடித்த கோவிட் தொற்று, போக்குவரத்து நெருக்கடி மற்றும் ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் உரிய நேரத்தில் தீர்க்கப்படாமை போன்ற காரணங்களால், சில காலம் பாடசாலைகளை மூட வேண்டியிருந்ததால் அனைத்து தர பாடசாலை மாணவர்களாலும் தங்கள் பாடத்திட்டத்தை சரியாக பூர்த்தி செய்ய முடியவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பல பருவ கால பரீட்சைகளை நடத்தாமை, பிரயோக பயிற்சி பரீட்சைகள் தடைபடல்,இணைய கல்வி மூலம் மேலும் கல்வி ஏற்றத்தாழ்வு அதிகரித்தல் போன்றன கல்வித்துறையில் நெருக்கடி தீவிரமடைய காரணமாக அமைந்துள்ளதால் இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர (உயர்தர) பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்கள் இப்பிரச்சினைகளால் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நிலைமையால் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய(09) பாராளுமன்ற அமர்வில் 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பினார்.