பெண்களின் சூதாட்ட விடுதியைச் சுற்றி வளைத்த பொலிஸார்: 7 பேர் கைது

Prathees
2 years ago
பெண்களின் சூதாட்ட விடுதியைச் சுற்றி வளைத்த பொலிஸார்: 7 பேர் கைது

பெந்தோட்டைஇ மத்தவெல பிரதேசத்தில் பெண் ஒருவரின் வீட்டில் சில காலமாக இயங்கி வந்த சூதாட்ட விடுதியில் நான்கு பெண்கள் உட்பட ஏழு பேரை கைது செய்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் நேற'று இரவு (8) தெரிவிக்கின்றனர்.

இந்தசூதாட்ட விடுதி சில காலமாக பெண்களை மட்டுமே சேர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்இ இந்த சூதாட்ட விடுதியைச் சுற்றிவளைத்த போதுஇ ​​விடுதியை  வழிநடத்திய பெண் உட்பட ஏழு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் முப்பத்தேழு முதல் முப்பத்தைந்து வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும்இ மூன்று ஆண்களும் முப்பத்தேழு முதல் நாற்பத்தேழு வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அன்றைய தினம் இரவு பொலிஸ் பிணையில் விடுவித்து பலப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!